ஆத்தூர் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணிடம் சில்மிஷம் தட்டிக்கேட்டவர்களை தாக்கியவர்கள் மீது வழக்கு


ஆத்தூர் அருகே  மாற்றுத்திறனாளி பெண்ணிடம் சில்மிஷம்  தட்டிக்கேட்டவர்களை தாக்கியவர்கள் மீது வழக்கு
x

ஆத்தூர் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணிடம் சில்மிஷம் செய்ததால், தட்டிக்கேட்டவர்களை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம்


ஆத்தூர், ஜூன்.1-

ஆத்தூர் அருகே உள்ள கவர்பனை கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம், கூலித்தொழிலாளி. இவருைடய மனைவி அலமேலு (வயது 45), மாற்றுத்திறனாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாண்டியனிடம் மாற்றுத்திறனாளி பெண் அலமேலு, அவரது மகள் ஜெயந்தி ஆகியோர் தட்டி கேட்டனர். அப்போது அவர்கள் 2 பேரையும் பாண்டியன், அவரது தாய் சுமதி ஆகிய இருவரும் சேர்ந்து தாக்கி உள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அலமேலு மற்றும் ஜெயந்தி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் பாண்டியன், சுமதி ஆகிய 2 பேர்் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story