சிங்கமுத்து அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்


சிங்கமுத்து அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
x

சிங்கமுத்து அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே கொத்தக்கோட்டையில் சிங்கமுத்து அய்யனார், கருப்பர், சோமக்குண்டு முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதைெயாட்டி யாகசாலையில் கலசங்களில் புனிதநீர் நிரப்பி வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் அய்யனார் கோவில் மூலஸ்தான விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story