சிறு, குறு வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்


சிறு, குறு வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்
x

டெஸ்ட் பர்சேஸ் முறையில் இருந்து சிறு, குறு வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் வணிகவரித்துறை அலுவலகத்தில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் துணைத் தலைவர் தென்னரசு தலைமையில நிர்வாகிகள் வணிக வரித்துறை அலுவலகத்தில், வணிக வரித்துறை அலுவலர் ஜெயக்குமாரிடம் நேற்று ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாகை மாவட்டத்தில் சில்லறை வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கி, அதை டெஸ்ட் பர்சேஸ் என குறிப்பிட்டு அதற்கு அபராதமாக ரூ.20 ஆயிரம் வரை வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. அனைத்து சில்லறை வியாபாரிகளும் தாங்கள் பொருட்களை வாங்கும் போது, அதற்கான வரியை செலுத்திய பிறகே பொருட்களை வாங்கி அதை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் ஏற்கனவே வரி விதிப்பிற்கு உட்பட்டது.

ஆனாலும் வணிக வரித்துறை அலுவலர்கள், சில்லறை வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையது அல்ல. இது சில்லறை, சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கும். டெஸ்ட் பர்ச்சேஸ் முறை குறித்து, 6 மாத காலம் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்திய பிறகு, ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல்வியாபாரம் செய்கிற வியாபாரிகளிடம் மட்டும் டெஸ்ட் பர்சேஸ் முறையை மேற்கொள்ள வேண்டும். சிறு, குறு வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story