ஸ்மார்ட் போர்டு மூலம் வகுப்புகள் தொடக்க விழா


ஸ்மார்ட் போர்டு மூலம் வகுப்புகள் தொடக்க விழா
x

தர்மபுரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் போர்டு மூலம் வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி சந்தைப்பேட்டையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் போர்டு மூலம் பாடங்கள் நடத்தும் வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தலைமை தாங்கினார். ஆசிரியர் சவுந்தரபாண்டியன் வரவேற்றார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் குணசேகரன் கலந்துகொண்டு ஸ்மார்ட் போர்டு மூலம் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கேசவக்குமார், வட்டார கல்வி அலுவலர் ஜீவா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா உள்ளிட்டோர் ஸ்மார்ட் போர்டு மூலம் பாடம் நடத்தும் முறைகள் குறித்து விளக்கி பேசினார்கள். விழாவில் ஆசிரியைகள் , பெற்றோர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story