காரில் ரேஷன் அரிசி கடத்தல்


காரில் ரேஷன் அரிசி கடத்தல்
x

பணகுடி அருகே காரில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வள்ளியூர் பகுதியில் பணகுடி-கும்பிளம்பாடு ரோட்டில் சுண்டவிளை ரெங்கநாதபுரம் சந்திப்பு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு கார் வந்தது. கார் டிரைவர் போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்திவிட்டு தப்பி சென்றார்.

இதையடுத்து போலீசார் அந்த காரை சோதனை செய்த போது காரில் 480 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் காரில் ரேஷன் அரிசியை கடத்தி வந்தவர் கும்பிளம்பாடு பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ரேஷன் அரிசி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து வெங்கடாசலத்தை தேடி வருகின்றனர்.


Next Story