பாம்பு கடித்து தொழிலாளி சாவு


பாம்பு கடித்து தொழிலாளி சாவு
x

கபிஸ்தலம் அருகே பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

கபிஸ்தலம் அருகே உள்ள வடசருக்கை மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது56). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மாலை உம்பளப்பாடியில் ஒரு கரும்பு வயலில் வேலைக்கு சென்றார். அப்போது வயலில் இருந்த விஷத்தன்மை கொண்ட பாம்பு இவரது காலில் கடித்தது. இதனால் அவர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே மாணிக்கம் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ஹேமா அளித்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story