கோவில், வீடுகளில் புகுந்த பாம்புகள்
தர்மபுரியில் கோவில், வீடுகளில் புகுந்த பாம்புகளை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.
தர்மபுரி
தர்மபுரி பனந்தோப்பு பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் ஒரு நல்ல பாம்பு புகுந்தது. இதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி அவர்கள் தர்மபுரி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து அந்த பாம்பை பிடித்தனர். இதேபோல் தர்மபுரி சித்தேஸ்வரா நகர் பகுதியில் உள்ள ஒரு வீடு, தர்மபுரி சிறுவர் பூங்கா அருகே உள்ள மற்றொரு வீடு ஆகியவற்றிலும் 2 நல்ல பாம்புகள் புகுந்தன. இவற்றையும் தீயணைப்பு படையினர் பிடித்தனர். பின்னர் அவர்கள் 3 பாம்புகளையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 3 பாம்புகளையும் வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
Related Tags :
Next Story