விவசாய நிலங்களில் சூரிய ஒளி பம்புசெட் அமைப்பு


விவசாய நிலங்களில் சூரிய ஒளி பம்புசெட் அமைப்பு
x

வாலாஜா அருகே உள்ள செங்காடு ஊராட்சியில் விவசாய நிலங்களில் சூரிய ஒளி பம்புசெட் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

வாலாஜா அருகே உள்ள செங்காடு ஊராட்சியில் விவசாய நிலங்களில் சூரிய ஒளி பம்புசெட் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

கலெக்டர் பார்வையிட்டார்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே உள்ள செங்காடு ஊராட்சியில் வேளாண் துறையின் மூலம் சூரிய ஒளி பம்பு செட் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

மத்திய அரசு நிதியில் 70 சதவீத மானியத்தில் சூரிய ஒளி பம்புசெட் விவசாயிக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.3,65,298 மொத்த மதிப்பீட்டில் 70 சதவீத மானியமாக ரூ.2,55,750 அரசு வழங்குகிறது. எஞ்சியுள்ள 30 சதவீத தொகை ரூ.1,09,589 விவசாயிகள் பங்களிப்பாக வங்கியில் செலுத்திய பின்னர், இந்த சூரிய ஒளி பம்புசெட் தகடு அமைக்கப்பட்டு, 7.5 குதிரை திறன் கொண்ட மின்மோட்டார், ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

9 விவசாயிகள்

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பம்பு செட் இயங்குகிறது. தேவையான அளவு நிலங்களுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது. மின் கட்டணம் இல்லை. இந்த நிலத்தில் இரவு சூரிய ஒளித் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தகடு 340 வாட்ஸ் திறன் கொண்டது. இந்த நிலத்தில் 6,800 வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, அதன் மூலம் மின் மோட்டார் இயக்கி நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. இந்தத்திட்டத்தில் 9 விவசாயிகள் அரசு மானியம் ரூ20 லட்சத்து 66 ஆயிரத்தில் சூரிய ஒளி பம்புசெட் அமைத்து பயனடைந்துள்ளனர.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story