தென்மாவட்ட வில்வித்தை போட்டி:செவல்குளம் பள்ளி சாம்பியன்


தென்மாவட்ட வில்வித்தை போட்டி:செவல்குளம் பள்ளி சாம்பியன்
x
தினத்தந்தி 26 Oct 2023 12:15 AM IST (Updated: 26 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தென்மாவட்ட வில்வித்தை போட்டியில் செவல்குளம் பள்ளி மாணவ, மாணவியர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

தூத்துக்குடி

கழுகுமலை:

தென் மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டி கயத்தாறில் நடைபெற்றது. இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் 8 வயது முதல் 19 வயது வரையிலான அனைத்து பிரிவுகளிலும் செவல்குளம் செயிண்ட் பவுல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் தென் மாவட்ட அளவிலான வில்வித்தை சாம்பியன் பட்டத்தை இப்பள்ளி மாணவ, மாணவியர் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் கே.எஸ். எஸ். நாகராஜ், பள்ளி முதல்வர் ராபர்ட், துணை முதல்வர் கோகுல்ராஜ் கண்ணன், வில்வித்தை பயிற்சியாளர் கனகராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story