தென்னிந்திய கராத்தே போட்டி


தென்னிந்திய கராத்தே போட்டி
x
தினத்தந்தி 26 Feb 2023 7:30 PM GMT (Updated: 26 Feb 2023 7:31 PM GMT)
தர்மபுரி

41-வது தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி தர்மபுரி ஜோதி மகாலில் நடந்தது. இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள். மற்றும் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.

இதில் பாலக்கோடு ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த முதல் கிராண்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றனர். 2-வது கிராண்ட் சாம்பியன் ஷிப் பட்டத்தை மத்தூர் கலைமகள் கலாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், 3-வது கிராண்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தர்மபுரி டவுன் செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் தட்டிச் சென்றது. 4-வது கிராண்ட் சாம்பியன் ஷிப் பட்டத்தை அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியும், 5-வது கிராண்ட் சாம்பியன் ஷிப் பட்டத்தை இட்லப்பட்டி ஸ்ரீசரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் தட்டிச் சென்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு தர்மபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாக அலுவலர் சக்திவேல் சாம்பியன்ஷிப் பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தென்னிந்திய கராத்தே சங்க தலைவர் நடராஜ் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


Next Story