வண்டல் மண் அள்ளும் அனுமதிக்கான சிறப்பு முகாம்
பேரையூர் தாலுகாவில் வண்டல் மண் அள்ளும் அனுமதிக்கான சிறப்பு முகாம் நடந்தது.
மதுரை
பேரையூர்,
பேரையூர் தாசில்தார் ரவிச்சந்திரன் கூறியதாவது:- பேரையூர் தாலுகா விவசாயிகள், மற்றும் விவசாய சங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ள கண்மாய்களில் மட்டும் வண்டல் மண் அள்ள மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பம் பெறுவதற்கு சிறப்பு முகாம் பேரையூர் தாலுகா அலுவலகத்தில் வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. விண்ணப்பத்துடன் சிட்டா மற்றும் அடங்கல் ஆகிய ஆவணங்களை இணைத்து முகாமில் கொடுக்க வேண்டும்.இந்த முகாமில் வேளாண்மை துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை ,ஊரக வளர்ச்சி துறை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆகிய துறையில் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story