வட்டார அளவில் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்


வட்டார அளவில் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்
x

வட்டார அளவில் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தினர்.

திருவண்ணாமலை

வட்டார அளவில் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகள் குறைதீர்வு நாள் கூட்டம் திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

உதவி கலெக்டர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி முன்னிலை வகித்தார். தாசில்தார் சுரேஷ் வவேற்றார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 75-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், வீட்டில் 2 கியாஸ் சிலிண்டர் வைத்து உள்ளவர்கள், வீட்டில் ஒரு அரசு வேலை பார்ப்பவர்கள், சொத்துகள் விற்பனை செய்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

நிறுத்தம் செய்யப்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித்தொகை கிடைக்க வேண்டும். தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க வங்கிகளில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடையாள அட்டை

அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் மாற்றுத் திறனாளிகள் வந்து செல்லும் வகையில் சாய்வு தளம் அமைக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் வாரந்தோறும் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

எனவே மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமை வாரத்திற்கு 2 நாட்கள் நடத்த வேண்டும். மேலும் வட்டார அளவிலான சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடும் மாற்றுத் திறனாளிகளுக்கு முறையாக அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மேலும் தனிநபர் கோரிக்கைகளை மனுக்களாக அதிகாரிகளிடம் வழங்கினர்.

கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலர் சண்முகசுந்தரம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் அமுல், பன்னீர்செல்வம், ரேணுகா, சுகுணா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story