பெருமாள் கோவில்களில் சிறப்பு அலங்காரம்


பெருமாள் கோவில்களில் சிறப்பு அலங்காரம்
x

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முதல் சனிக்கிழமை

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கண்ணமங்கலம் அருகே படவேடு ஜவ்வாதுமலை ராஜகம்பீரம் என்ற கோட்டை மலையில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் 47-ம் ஆண்டு உற்சவ திருவிழா தொடங்கியது.

இதை முன்னிட்டு அதிகாலை 4 மணி அளவில் கோவில் திறக்கப்பட்டு, அபிஷேகம், ஆராதனை, பஜனைகள் நடைபெற்றது. பெருமாளுக்கு சீனிவாசர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உற்சவர் உட்பிரகார உலாவும் மாலையில் படவேடு பகுதியில் திருவீதி உலாவும் நடந்தது.

ஆரணி

ஆரணி நகரில் சார்பனார்பேட்டை பகுதியில் உள்ள கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் சாமிக்கு திருப்பதி வெங்கடாஜலபதி மலையப்ப சாமி அலங்காரம் செய்திருந்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலர்மேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவில், தச்சூர் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவில், ஆரணி இரும்பேடு பகுதியில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் மகா அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.

காலை முதல் இரவு வரை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

போளூர்

போளூர் சுயம்பு சம்பத்கிரி லட்சுமி நரசிம்ம சுவாமி மலைக்கோவிலில் தாயாருக்கும், சாமிக்கும் சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

பக்தர்கள் 900 படிக்கட்டுகள் ஏறி சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் ஆர்.குண்ணத்தூர் வைகுண்ட பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெரிய அய்யம்பாளையம்

கண்ணமங்கலம் அருகே பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் கருடவாகனத்தில் உற்சவம் நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனை செய்து வழிபட்டனர்.

இதேபோல் கண்ணமங்கலம் லட்சுமி நாராயணன் பெருமாள் கோவிலில்் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story