கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனையை தடுக்க தனிப்படை: போலீஸ் சூப்பிரண்டு


கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனையை தடுக்க தனிப்படை: போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 16 May 2023 6:45 PM GMT (Updated: 16 May 2023 6:45 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தனிப்படை

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசுப்பு மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

தகவல்

ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் தயாரிக்கப்படும் மதுபானங்களை கடத்தி வந்து தூத்துக்குடி மாவட்டத்தில் விற்பனை செய்பவர்கள், சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்பவர்கள், கலப்பட மதுபானங்கள் தயார் செய்து விற்பனை செய்பவர்கள், கஞ்சா மற்றும் கொடிய போதை மருந்து, மாத்திரைகள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்புவின் வாட்ஸ்அப் எண் 98409 23723-க்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story