சிறப்பு மருத்துவ முகாம்


சிறப்பு மருத்துவ முகாம்
x

வள்ளியூர் யூனியன் கண்ணநல்லூர் டி.டி.டி.ஏ. பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு);

வள்ளியூர் யூனியன் கண்ணநல்லூர் டி.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசு பெட்டகம், கையேடு அட்டை வழங்கினார்.

முகாமில் பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, இ.சி.ஜி. ஸ்கேன், தொற்றுநோய் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடப்பட்டது. கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பி.எஸ்.மகாராஜன், துணைத்தலைவர் ராணி செல்வி, எம்.எம்.செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோலப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story