பனைக்குளத்தில் சிறப்பு மருத்துவ முகாம்


பனைக்குளத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 21 May 2023 6:45 PM GMT (Updated: 21 May 2023 6:46 PM GMT)

பனைக்குளத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

ராமநாதபுரம்

பனைக்குளம்.

ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை பாரதி நகரில் நடராஜ் கார்டியாக் கேர் மருத்துவமனை இயங்கி வருகிறது.இந்த மருத்துவமனை இயக்குனரும் இருதய சிறப்பு மருத்துவருமான ஜோதி முருகன் நடராஜன் ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்திடும் வகையில் கடலோரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி இலவச சிகிச்சை அளித்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை, முஸ்லிம் நிர்வாக சபை ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாமை நேற்று காலை மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பகுர்தீன் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடத்தின. முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் பனைக்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்னுல் அஸ்லாம், செயலாளர் ரோஸ் சுல்தான், முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் அம்சத் அலி, செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் பனைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பவுசியா பானு, வாலிப முஸ்லிம் சங்கம், ஐக்கிய முஸ்லிம் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற டாக்டர் ஜோதி முருகன் நடராஜன் கலந்துகொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். முகாமில் ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவு பரிசோதனை, மூன்று மாத சர்க்கரை சராசரி அளவு பரிசோதனை, இ.சி.ஜி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை இலவசமாக செய்தனர். முடிவில் கால்பந்து விளையாட்டு முன்னணி வீரர் குட்டி முகமது நன்றி கூறினார்.


Next Story