தமிழக- கேரள எல்லையில் சிறப்பு மருத்துவ முகாம்


தமிழக- கேரள எல்லையில் சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 20 Jun 2023 12:30 AM IST (Updated: 20 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேனி

கேரள மாநிலத்தில் பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த சில வாரங்களாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேரள மாநில சுகாதாரத்துறையினர் காய்ச்சல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலும் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் ஏலக்காய் தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். அதேபோல் கேரளாவின் பல பகுதியிலிருந்தும் அங்குள்ள மக்கள் தமிழகத்திற்கு வந்து செல்கின்றனர். இதனால் கேரளாவில் மிக வேகமாக பரவிவரும் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் தமிழகப் பகுதிக்குள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக -கேரள எல்லைப்பகுதிகளான போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைக்க தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story