ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதனைமுன்னிட்டு வீர ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர் ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளி உள்ள சங்கடஹர மங்களமாருதி ஆஞ்சநேயர், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி வீர ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து வடைமாலை சாற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story