கோவில்களில் சிறப்பு வழிபாடு
தர்மபுரி மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ண ஜெயந்தி விழா
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தர்மபுரி அடுத்த ஆட்டுக்காரன்பட்டி ராதே கிருஷ்ணா பிருந்தாவனத்தில் அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சாமி கோவிலில் சாமிக்கு பால் அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் சாமி திருவீதி உலா வந்தது.
உறியடி-வழுக்கு மரம்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை பூதேவி, ஸ்ரீதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின் போது உறியடி விழா மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், வரதகுப்பம் வெங்கட்ரமண சாமி கோவில், செட்டிக்கரை பெருமாள் கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவில், மூக்கனூர் ஆதிமூல பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் கோவில், சோகத்தூர் திம்மராய பெருமாள் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி அனைத்து வீடுகளிலும் சிறப்பு பூஜை நடந்தது.