அன்னப்ப சாமிக்கு சிறப்பு வழிபாடு


அன்னப்ப சாமிக்கு சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 6 Oct 2023 6:45 PM GMT (Updated: 6 Oct 2023 6:47 PM GMT)

வேதாரண்யம் நகர் அன்னப்ப சாமிக்கு சிறப்பு வழிபாடு

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகரில் அமைந்துள்ளது பூரண புஷ்கலா சமேத அன்னப்ப சாமி கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமையையொட்டி சாமிக்கு பல்வேறு விதமான திரவியங்கள், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story