பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி


பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி
x
தினத்தந்தி 10 Nov 2022 6:45 PM GMT (Updated: 10 Nov 2022 6:46 PM GMT)

ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

மயிலாடுதுறை

ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

பேச்சுப்போட்டி

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் வருகிற 14-ந்தேதி(திங்கட்கிழமை) மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு காலை 10 மணிக்கும் போட்டிகள் தொடங்கப்படும்.

பரிசுத்தொகை

இந்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வுசெய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.அனுமதி பெற்று வர வேண்டும் .இந்த போட்டியில் ஒரு கல்லூரிக்கு 2 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் இருந்து அனுமதி பெற்று வர வேண்டும்.6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு ஒருவர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து மாணவ-மாணவிகள் அனுமதி பெற்று வர வேண்டும். எனவே மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story