கராத்தே போட்டியில் மாணவி சாதனை
கராத்தே போட்டியில் மாணவி சாதனை படைத்துள்ளார்.
பரமக்குடி,
பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி அனுஸ்ரீ. இவர் டெல்லியில் நடந்த தேசிய அளவிலான சப்-ஜூனியர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் 10 வயது 25 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்து உள்ளார்.
இந்த மாணவியையும், பயிற்சி அளித்த கராத்தே பயிற்சியாளர்களையும் ஆயிர வைசிய சபை நிர்வாகிகள், ஆயிர வைசிய மெட்ரிக்மேல்நிலை பள்ளியின் செயலாளர் முருகானந்தம், பொருளாளர் ராசி ராஜேஷ் கண்ணன், இணை செயலாளர்கள் ராசி பிரசன்னா, கே.டி.ஆர். பிரசன்னா, பள்ளியின் முதல்வர் ஜெயபிரமிளா உள்பட ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ - மாணவிகள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்துள்ளனர். அதேபோல் இறகு பந்து, டேபிள் டென்னிஸ், கேரம் ஆகிய விளையாட்டு போட்டிகளில் மாநில அளவிலான போட்டிக்கு அந்த பள்ளியை சேர்ந்த ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு மாணவ - மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.