அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்


அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்
x
தினத்தந்தி 26 Feb 2023 6:45 PM GMT (Updated: 26 Feb 2023 6:46 PM GMT)

சின்னகோவிலான்குளம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

தென்காசி

பனவடலிசத்திரம்:

மேலநீலிதநல்லூர் யூனியன் சின்னக்கோவிலாங்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் கோப்பை பயிற்சிக்காக மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் வெள்ளத்துரை பாண்டியன் முன்னிலை வகித்தார்.

வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், திருமலைக்குமார், கூட்டுறவு சங்க தலைவர் விஜயபாண்டியன், மகேந்திரன், முகேஷ், கிளை செயலாளர் செந்தில்குமார், சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றிய பிரதிநிதி சுதா, பால்பாண்டியன், ராமசுப்பு, தலைவர் மகேந்திரன், அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story