சீனிவாச பெருமாள் கோவில் தேேராட்டம்


சீனிவாச பெருமாள் கோவில் தேேராட்டம்
x

சீனிவாச பெருமாள் கோவில் தேராட்டம் நடைபெற்றது.

திருச்சி

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் பத்மாவதி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் 13-வது ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த 14-ந் தேதி அனுக்ைஞ மற்றும் ஆராதனை நடந்தது. 16-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேரில் பத்மாவதி சமேத சீனிவாச பெருமாள் சிறப்பலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையம் வந்தடைந்தது. இதனைத்தொடர்ந்து மாலை தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story