மீண்டும் விறகு அடுப்பில் சமையல் செய்ய வேண்டிய நிலை வந்துவிடும்


மீண்டும் விறகு அடுப்பில் சமையல் செய்ய வேண்டிய நிலை வந்துவிடும்
x

தொடரும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் மீண்டும் விறகு அடுப்பில் சமையல் செய்ய வேண்டிய நிலை வந்து விடும் என்று குடும்ப பெண்கள் புலம்பி வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

தொடரும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் மீண்டும் விறகு அடுப்பில் சமையல் செய்ய வேண்டிய நிலை வந்து விடும் என்று குடும்ப பெண்கள் புலம்பி வருகின்றனர்.

நடவடிக்கை

கியாஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ. 50 உயர்ந்துள்ளது. இதுகுறித்து குடும்ப பெண்கள் கூறிய கருத்துக்கள் விவரம் வருமாறு:- ராமேசுவரம் பஸ் நிலைய பகுதியை சேர்ந்த லோக சுந்தரி: 2 வாரத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தி வருகிறது. ஏற்கனவே ரூ. 1060 விலை இருந்து வந்தாலும் சிலிண்டரை தூக்கி வருவதற்கு ரூ.50 சேர்த்து ரூ.1,110 தற்போது கொடுத்து வருகிறோம். இனி ரூ. 1160 கொடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். விலையை கட்டுப்படுத்த அரசு எப்போதுதான் நடவடிக்கை எடுக்குமோ.

தங்கச்சிமடம் சேதுபதி நகர் பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி: கியாஸ் சிலிண்டரின் விலை அவ்வப்போது தொடர்ந்து உயர்த்தி வருகிறது. அரசு கியாஸ் சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. இன்னும் விலையை ஏற்றத் தான் செய்வார்களே தவிர விலையை குறைக்க போவது கிடையாது. சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை குறைக்க வேண்டும் என்பதே நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த பெண்களின் கோரிக்கை மற்றும் விருப்பமாகும்.

முற்றுப்புள்ளி

தொண்டி அந்திவயல் கிராமம் ராதா:

அடிக்கடி சிலிண்டர் விலையை கூட்டுவது என்பது வாடிக்கையாக நடந்து வருவதால் எங்கள் பகுதியில் 2 சிலிண்டர்களை பயன்படுத்தி வந்த குடும்பங்கள் சிலிண்டர் விலை உயர்வால் தற்போது ஒரு சிலிண்டர் தான் பயன்படுத்தி வருகிறோம். மீண்டும் மீண்டும் விலையை உயர்த்திக்கொண்டே போவதால் இனிமேல் இந்த ஒரு சிலிண்டரையும் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு பழைய முறைப்படி விறகு அடுப்பில் சமைக்க வேண்டியது தான். மத்திய அரசு மாநில அரசு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிலிண்டர் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

நெருக்கடி

சிவகங்கை இமய மடோனா : ஏற்கனவே கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 1,100 ஆக உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரு கின்றனர். இந்த நிலையில் சிலிண்டரின் விலையை மேலும் ரூ. 50 உயர்த்தியதன் மூலம் குடும்ப தலைவிகள் மிகவும் அல்லல் படுவார்கள். மேலும் 100 நாள் திட்ட வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கூட கடந்த ஒரு மாதமாக ஊதியம் வழங்கப் படாத நிலை உள்ளது. எனவே இதே நிலை நீடித்தால் மீண்டும். பழைய காலத்தைப்போல விறகு அடுப்பு பயன் படுத்த வேண்டிய நிலை உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story