கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை


கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமைமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமைமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 25-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.

அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு அவர்களின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அறிவுரை வழங்கினர். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

நடவடிக்கை

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் புதன்கிழமைகளில் நடைபெறும். இந்த குறைதீர்வு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க முடியாத பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கந்து வட்டிக்காரர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேரடியாக எந்தநேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம். கந்து வட்டி வசூலிப்பவர்களை கண்காணிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு

மேலும் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் மணல் திருட்டுகள் அதிக அளவில் நடப்பதாக தொடர்ந்து புகார் வருகிறது. மணல் கடத்துவது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒரு போலீசார் மூலம் அங்கு குழுக்கள் அமைக்கப்பட்டு அதன்மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story