அரிசிக்கான ஜி.எஸ்.டி.- மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரிசிக்கான ஜி.எஸ்.டி.- மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

அரிசிக்கான ஜி.எஸ்.டி.- மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

பவானி

அத்தியாவசிய பொருட்களான அரிசி, பால், தயிர் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான கட்டணம் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. விதித்ததை திரும்ப பெறக்கோரியும், தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும், பெட்ரோல், டீசல், கியாஸ் கட்டண உயர்வை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பவானியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் முருகேசன் தலைமை தாங்கினார். பவானி சட்டமன்ற தொகுதி இணைச்செயலாளர் பிரதாப், மாநில ஆளுமை குழு பொறுப்பாளர் சீதாலட்சுமி, மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு சட்டமன்ற பொறுப்பாளர் நவநீதன், திருப்பூர் நாடாளுமன்ற பொறுப்பாளர் வானதி வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரிசி, பால், தயிர் போன்றவற்றுக்கு ஜி.எஸ்.டி. விதித்ததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் நாம் தமிழர் கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story