சத்தியமங்கலம் அருகே செங்கல் தயாரிப்பாளர்கள்-தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


சத்தியமங்கலம் அருகே செங்கல் தயாரிப்பாளர்கள்-தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

சத்தியமங்கலம் அருகே செங்கல் தயாரிப்பாளர்கள்- தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே செங்கல் தயாரிப்பாளர்கள்- தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

செங்கல் சூளைகள்

சத்தியமங்கலம் அருகே உள்ள பெரிய கொடிவேரி, அத்தியப்ப கவுண்டன் புதூர், சதுமுகை ஆகிய பகுதிகளில் அதிக அளவில் செங்கல் சூளைகள் உள்ளன. இந்த செங்கல் சூளைகளில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் செங்கற்கள் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தநிலையில் நேற்று காலை தாசப்பகவுண்டன்புதூரில் செங்கல்சூளை தயாரிப்பாளர்கள், கல் அறுக்கும் தொழிலாளர்கள், லோடு ஏற்றிச்செல்லும் லாரியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். செங்கல் தயாரிக்க தேவையான செம்மண் எடுக்க விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

17 ஆவணங்கள்

செங்கல் தயாரிக்க தேவைப்படும் செம்மண் எடுக்க 17 ஆவணங்களை காண்பிக்க வேண்டுமென வருவாய்த்துறையினர் வற்புறுத்தி வருகிறார்கள், இதனால் சாதாரண நிலையில் உள்ள செங்கல் தயாரிக்கும் உரிமையாளர்கள் சிரமப்பட்டு ஆவணங்களை சமர்ப்பித்தும் செம்மண் எடுக்க சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் செம்மண் தட்டுப்பாடு ஏற்பட்டு உற்பத்தி குறைகிறது.

இதனால் ஒரு செங்கல் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதையே நம்பியுள்ள சிறு செங்கல் தயாரிப்பாளர்கள், செங்கல் அறுக்கும் பெண்கள், லாரி கூலி தொழிலாளர்கள் ஆகியோர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே செம்மண் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.


Next Story