மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி தொழிலாளி போராட்டம்
தளி அருகே ஊராட்சியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி தொழிலாளி போராட்டத்தில் ஈடுபட்டு கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேன்கனிக்கோட்டை
தளி அருகே ஊராட்சியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி தொழிலாளி போராட்டத்தில் ஈடுபட்டு கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிலாளி போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள உப்ராண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் உப்ராண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கிராமமக்கள் அந்த பகுதியில் திரண்டனர்.
அப்போது அவர் பள்ளப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. மேலும் குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்பவர்களை அழைத்து வந்து கையெழுத்து வாங்கியதாகவும், கிராமசபை கூட்டத்திற்கு வராதவர்கள் வேலைக்கு வர வேண்டாம் என மிரட்டுவதாக கூறி கூச்சல் போட்டார்.
பரபரப்பு
பின்னர் அவர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது இருந்து கீழே இறங்கினார். ஊராட்சியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தொழிலாளி தேசிய கொடியை குடிநீர் தொட்டி மீது கட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.