மாணவி ஸ்ரீமதி மரணம்: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


மாணவி ஸ்ரீமதி மரணம்: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
x

மாணவி ஸ்ரீமதி மரணம்: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மக்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். கலவரத்தில் பள்ளி சூறையாடப்பட்டுள்ளது. முக்கிய ஆவணங்கள் மாணவர்களின் சான்றிதழ்களும், பள்ளி வளாகங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு முறையான விசாரணை மேற்கொண்டு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்கவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இதேபோல், அகில இந்திய மகளிர் கலாசார சங்க ஒருங்கிணைப்பாளர் ஹில்டா மேரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாணவி ஸ்ரீமதி இறப்பு விஷயத்தில் தமிழக அரசாங்கம் விசாரணையை நேர்மையாகவும், விரைவாகவும் நடத்தி முடிக்கவும், மாணவியின் மரணத்துக்கு காரணமான பள்ளி நிர்வாகத்துக்கும், அதற்கு உடந்தையாக இருந்த மற்ற குற்றவாளிகளுக்கும் உச்சபட்ச தண்டனையை உறுதிப்படுத்தவும் வேண்டும்' என தெரிவித்துள்ளார்.


Next Story