மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்


மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
x

குடியரசு தின தடகள போட்டியை முன்னிட்டு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 63-வது மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது.

இதனையொட்டி ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளி மாணவ, மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தலைமை ஆசிரியர்கள் மகேஸ்வரி, தாமரைச்செல்வி, வசந்தா ஆகியோர் தலைமை தாங்கி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் கோட்டை தெரு, பழைய பஸ் நிலையம் வழியாக மார்க்கெட் ரோடு, புதிய பஸ் நிலையம் வழியாக மீண்டும் சுப்பிரமணி சாஸ்திரியார் பள்ளியில் நிறைவு பெற்றது.

இதேபோல் வந்தவாசியில் விழிப்புணர்வு ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் போட்டிக்கான ஜோதியை மாணவர் ஒருவர் எடுத்து செல்ல மற்ற அனைவரும் அவரை பின்தொடர்ந்து ஊர்வலமாக சென்றனர்.

வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் ஊா்வலம் தொடங்கி தேரடி, பஜார் வீதி, பழைய பஸ் நிலையம், ஆரணி சாலை வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சென்றடைந்தது.

ஊர்வலத்தில் வந்தவாசி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


Next Story