மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம்


மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம்
x

பெரம்பலூரில் உலக வன நாளையொட்டி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூரமாவட்ட வனத்துறை சார்பில், உலக வன நாளையொட்டி வனங்களை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் மற்றும் உலக வெப்பமயமாதலை தடுக்கும் விதமாக காடுகள் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும், வனவளத்தை பேணிகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது.பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் கற்பகம் கொடிஅசைத்து தொடங்கிவைத்தார். இதில் தனலட்சுமிசீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, மாவட்ட வனஅதிகாரி குகனேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.பாலக்கரையில் புறப்பட்ட ஊர்வலம், சங்குப்பேட்டை, கடைவீதி வழியாகச்சென்று தெப்பக்குளம் அருகே நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் வனப் பகுதிகளை பாதுகாக்கவும், மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசக அட்டைகளை ஏந்தி முழக்கமிட்டு சென்றனர்.அதனைத்தொடர்ந்து, தனலட்சுமி சீனவாசன் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் பாரம்பரிய மரக்கன்றுகளை அதிகாரிகள் நட்டுவைத்தனர்.


Next Story