பரமத்தி அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி


பரமத்தி அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில்  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
x

பரமத்தி அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்தியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் கடந்த 1990-1992-ம் ஆண்டுகளில் 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களை தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். சிலர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும்‌ தங்களது கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களை முன்னாள் மாணவ, மாணவிகள் அழைத்து கவுரவித்து ஆசி பெற்றனர். ஒவ்வொரு மாணவர்களும் தங்களை குடும்பத்துடன் அறிமுகம் செய்து 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக 88 வயது தலைமை ஆசிரியர் அர்ச்சுனனை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்து ஆசி பெற்றனர். நிகழ்ச்சியில் அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டன. மேலும் பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது எனவும் முன்னாள் மாணவர்கள் உறுதி எடுத்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் ஆனந்தராஜா, பாண்டியன், பரமசிவம், தொழில் அதிபர் சேகர், பிரேம்குமார் மற்றும் துரைசாமி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story