வகுப்பறைக்குள் புகை வந்ததால் மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்


வகுப்பறைக்குள் புகை வந்ததால் மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
x

ராணிப்பேட்டை சிப்காட்டில் வகுப்பறைக்குள் புகை வந்ததால் மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று பள்ளியின் அருகே அமைந்துள்ள ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் இருந்து திடீரென புகை வந்து பள்ளியின் ஜன்னல் வழியாக வகுப்பறைக்குள் வந்துள்ளது.

இந்த புகையின் காரணமாக நான்காம் வகுப்பு மாணவ -மாணவிகள் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் விரைந்து வந்த சுகாதாரத் துறையினர் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.

மேலும் இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள், சுகாதாரத் துறையினர், மற்றும் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புகதை காரணமாக மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story