மாவட்ட வருவாய் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தலைமைச் செயலாளர் உத்தரவு
சென்னை, திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் பல மாவட்ட வருவாய் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை,
சென்னை மாற்றுத்திறனாளிகள் நல இணை இயக்குனர் ஜெயஷீலா, திருவள்ளூர் மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், மருத்துவப்பணிகள் கழக முன்னாள் பொது மேலாளர் அ.அனுசுயாதேவி, சென்னை மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளர் தெ.தியாகராஜன் தஞ்சை மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட அதிகாரி வ.மோகனசந்திரன் சிவகங்கை மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், அண்ணா பணியாளர் நிர்வாக கல்லூரி கூடுதல் இயக்குனர் ரெ.சுமன், நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்த கு.குலாம் ஜிலானி பாபா, சென்னை மாநகராட்சி (நிலம், உடைமை பிரிவு) மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட தனி மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, நில நிர்வாக ஆணையரக இணை கமிஷனராகவும், நாகை மாவட்ட வருவாய் அதிகாரி வி.சகிலா, சென்னை மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் (தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம்), திருவாரூர் மாவட்ட வருவாய் அதிகாரி ப.சிதம்பரம், சென்னை தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி நா.அங்கயற்கண்ணி, சென்னை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக இணை இயக்குனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பணி இடமாற்றம்
திறன் மேம்பாட்டுக்கழக மாவட்ட வருவாய் அதிகாரி செ.சாந்தி, சென்னை பெருநகர வளர்ச்சி குழும சந்தை மேலாண்மைக்குழு தலைமை நிர்வாக அதிகாரியாகவும், வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரி ஜெய்னுலாப்தீன், செய்தித்துறை சமூக வலைதள இணை இயக்குனராகவும், சென்னை அண்ணா பணியாளர் நிர்வாக கல்லூரி மாவட்ட வருவாய் அதிகாரி சு.கீதா, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளராகவும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக பொது மேலாளர் லி.பாரதி தேவி, சென்னை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக பொதுமேலாளராகவும், அப்பதவியில் இருந்த ரா.ஜீவா, கோவை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழக பதிவாளர் ஆ.ரவிசந்திரன், திருச்சி தமிழ்நாடு மாநில வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளராகவும், சென்னை முத்திரைத்தாள் மாவட்ட வருவாய் அதிகாரி வே.சாரதா ருக்மணி, டாம்ப்கால் பொது மேலாளராகவும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நில எடுப்பு மாவட்ட வருவாய் அதிகாரி க.அன்பழகன், திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் உள்பட தமிழகத்தில் மொத்தம் 42 மாவட்ட வருவாய் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதுதவிர, மயிலாடுதுறையில் ஏற்கனவே மாவட்ட வருவாய் அதிகாரியாக கு.விமல்ராஜ் நியமிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.