மாப்பிள்ளை வீட்டில் விருந்து சாப்பிட்ட 19 பேருக்கு திடீர் வாந்தி மயக்கம்


மாப்பிள்ளை வீட்டில் விருந்து சாப்பிட்ட 19 பேருக்கு திடீர் வாந்தி மயக்கம்
x

திருவெண்ணெய்நல்லூர் அருகே மாப்பிள்ளை வீட்டில் விருந்து சாப்பிட்ட 19 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் சிக்சை பெற்று வருகிறார்கள்

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்

மாப்பிள்ளை பார்க்க

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் மகன் அரங்கநாதன்(வயது28). இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவுசெய்தனர்.

இதையடுத்து மாப்பிள்ளையை பார்ப்பதற்காக கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா மேலிருப்பு கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன் மகள் கமலா(24) என்பவரின் குடும்பத்தினர் மாரங்கியூர் கிராமத்துக்கு வந்தனர். அவர்கள் மாப்பிள்ளையை பார்த்த பின்னர் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வாந்தி-மயக்கம்

இதில் அனைவருக்கும் சைவ உணவு பரிமாறப்பட்டது. இதில் உணவு சாப்பிட்ட மாரங்கியூர் கிராமத்தை சேர்ந்த உத்திராபதி(42), இவருடைய மகன்கள் சரவணன்(15), சரண்ராஜ்(15), கோவிந்தசாமி மகன் சிவகுமார்(19), நடராஜன் மகன் முகேஷ்(16), கோவிந்தசாமி மகன் கமலேஷ்(22), சுந்தரம் மகன் அரங்கநாதன்(28), முருகன் மகன் ஏழுமலை(46) ஆகியோருக்கு திடீரென வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதே போல் மேலிருப்பு கிராமத்தை சார்ந்த பெண் வீ்ட்டார் 11 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்களை அவர்களின் உறவினர்கள் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

மாப்பிள்ளை பார்க்க வந்த இடத்தில் விருந்து சாப்பிட்டவர்களுக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story