ராசிபுரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ராசிபுரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நிதி நிறுவனம்
கரூர் மாவட்டம் வாங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜான் பாட்ஷா. இவருடைய மகன் அசாருதீன் (வயது22). இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் வேலை பார்த்து வந்தார்.
இதற்காக ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரியில் சக நண்பர்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் அவர் வேலைக்கு சென்றார். சக நண்பர்களும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் வேலைக்கு சென்ற அசாருதீன் மீண்டும் வீட்டுக்கு வந்தார்.
விசாரணை
அப்போது அங்கு அவர் மின்விசிறியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து வெளியே சென்றிருந்த நண்பர்கள் வீட்டுக்கு வந்து தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் அசாருதீனின் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இதுதொடர்பாக நாமகிரிபேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த அசாருதீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அசாருதீன் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.