திருச்செங்கோடு அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


திருச்செங்கோடு அருகே  கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

திருச்செங்கோடு அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல்

எலச்சிபாளையம்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் கோபித்து கொண்டு திருச்செங்கோடு மண்டகபாளையம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்தார். இந்த நிலையில் ராமசாமி திருச்செங்கோடு அருகே உஞ்சனை வெங்கமேடு பகுதியில் உள்ள கறிக்கடை கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சென்ற திருச்செங்கோடு ரூரல் போலீசார் ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவருடைய மகள் சுமதி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story