இளம்பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை:
சாமல்பட்டி அருகே உள்ள வெள்ளியம்பதியை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி அனிதா (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் அனிதா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 4-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனிதா இறந்தார். இதுகுறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story