கோடை கால கலை பயிற்சி முகாம்
கோடை கால கலை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்
மதுரை மண்டல கலை பண்பாட்டு மையத்தின் கீழ் இயங்கும் ராமநாதபுரம் மாவட்ட சவகர் சிறுவர் மன்றத்தின் சார்பில் கோடைகாலத்தை மாணவர்கள் பயனுள்ளதாக செலவிடும் வகையில் 5 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு வெளிப்பட்டினம் முத்தாலம்மன் கோவில் அருகில் உள்ள டி.டி.விநாயகர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் கோடைகால கலை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் பரதநாட்டியம், குரலிசை, ஓவியம், சிலம்பம் ஆகிய கலைகள் பயிற்சி அளிக்கப்படும். வருகிற 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பயிற்சி நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களை திட்ட அலுவலர் லோகசுப்பிரமணியனை 9842567308 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை மதுரை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story