கோடைகால கால்பந்து பயிற்சி முகாம்


கோடைகால கால்பந்து பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 12 Jun 2022 4:57 PM GMT (Updated: 13 Jun 2022 5:05 AM GMT)

நாசரேத்தில் கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் நடந்தது.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி கால்பந்து மைதானத்தில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர் சங்கம், மர்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப் மற்றும் நாசரேத் வெஸ்ட் எண்ட் கிளப் சார்பில் 10 நாட்கள் இலவச கோடைக்கால கால்பந்து பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நாசரேத் கதீட்ரல் தலைமை குருவானவர் ஆல்பர்ட் தலைமை தாங்கினார்.. ஓய்வுபெற்ற ெரயில்வே அதிகாரி ஜான்சன், முன்னாள் தூத்துக்குடி போர்ட் டிரஸ்ட் அதிகாரி செல்வகுமார், ஓய்வுபெற்ற டி.சி.டபுள்யூ அதிகாரி வில்சன், தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரி ஆல்பர்ட், நாசரேத் நகர பஞ்சாயத்து துணைத் தலைவர் அருண் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்க தலைவர் ரூபன் துரைசிங், நாசரேத் வெஸ்ட் எண்ட் கிளப் சார்பில் லேவி அசோக் சுந்தர்ராஜ், மர்காஷிஸ் கலைக்கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ரோக்லண்ட் ஆகியோர் பேசினர். முன்னாள் இந்திய கால்பந்து அணி வீரர் காந்தி, மத்திய கலால் துறை அதிகாரிகள் ஜானகிராம், ஜீவன், திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி உடற்பயிற்சி இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் கால்டுவெல் நன்றி கூறினார்.


Next Story