கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம்


கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம்
x

வால்பாறை உள்பட 4 வனச்சரகங்களில் கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடங்கியது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை உள்பட 4 வனச்சரகங்களில் கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடங்கியது.

வனவிலங்குகள் கணக்கெடுப்பு

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, பொள்ளாச்சி ஆகிய 4 வனச்சரக பகுதியில் தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. கள இயக்குனர் உத்தரவின்பேரிலும், துணை கள இயக்குனர் அறிவுரையின்பேரிலும் உதவி வனப்பாதுகாவலர் மேற்பார்வையில் கணக்கெடுக்கும் பணியில் வனப்பணியாளர்கள் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் நடைபெற்ற கணக்கெடுக்கும் பணியை வனச்சரகர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். புலிகளின் எச்சம், கால்தடம், காட்டெருமைகள் ஆகியவை கணக்கெடுப்பின்போது பதிவு செய்யப்பட்டது. இந்த கணக்கெடுக்கும் பணி வருகிற 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. கணக்கெடுப்பின் முதல் மூன்று நாட்களுக்கு பெரிய தாவர உண்ணி வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.

மாமிச உண்ணிகள்

இதைத்தொடர்ந்து 30-ந் தேதி வரை மாமிச உண்ணிகளான புலிகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. 31-ந் தேதி கணக்கெடுப்பின் விவரங்களை பயிற்சி மையத்தில் ஒப்படைக்கும் பணி நடைபெறும். இதேபோன்று வால்பாறை வனச்சரக பகுதியில் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையிலும்,உலாந்தி வனச்சரகத்தில் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையிலும், பொள்ளாச்சி வனச்சரகத்தில் வனச்சரகர் புகழேந்தி தலைமையிலும் கணக்கெடுப்பு நடந்தது.


Next Story