தமிழக பட்ஜெட் சமூக நீதிக்கானது


தமிழக பட்ஜெட் சமூக நீதிக்கானது
x

தமிழக பட்ஜெட் சமூக நீதிக்கானது என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

விருதுநகர்

தமிழக பட்ஜெட் குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியதாவது:-

தமிழக அரசின் பட்ஜெட் தொலைநோக்கு பார்வையோடு தயாரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து துறைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

இது ஒரு சமூக நீதிக்கான பட்ஜெட் ஆகும். குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு இந்த நிதியாண்டில் இருந்து மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழகத்தையே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் நகரில் இருந்து மதுரை ஒத்தக்கடை வரை மெட்ரோ ெரயில் திட்டம் ரூ. 8500 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருப்பது அனைத்து மக்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

மதுரைக்கு மெட்ரோ ெரயில் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நான் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்தேன்.

என் குரலுக்கு மதிப்பளித்து மதுரை மெட்ரோ ெரயில் திட்டத்தினை அறிவித்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விருதுநகரில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, அனைத்துத் துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிப்பு ஆகியவை வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story