சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டது இல்லை - அமைச்சர் ரகுபதி பேட்டி


சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டது இல்லை - அமைச்சர் ரகுபதி பேட்டி
x
தினத்தந்தி 17 Oct 2023 10:57 AM IST (Updated: 17 Oct 2023 1:59 PM IST)
t-max-icont-min-icon

சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டது இல்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் 4 மணி காட்சியுடன் சேர்த்து 6 காட்சிகளுக்கு அனுமதி தரப்படும். லியோ படத்திற்கு நாளொன்றுக்கு 5 சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்படும்.

திமுக அரசு திரைத்துறையை முடக்கவில்லை, அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துகிறோம். மலிந்த தயாரிப்பாளர்களின் படங்களை கூட வெளியிடுகிறோம். சிறிய தயாரிப்பாளர்களை கூட அரசு ஊக்குவிக்கிறது. சினிமாவிற்கு தடை போட்டு திரையுலகின் விரோத போக்கை நாங்கள் மேற்கொள்ளமாட்டோம்.

திமுக ஆட்சியில் திரைத்துறை செழிப்பாக இருக்கிறது. சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டது இல்லை. திரையுலகம் எங்கள் நட்பு உலகம். திரை உலகம் செழிப்பாக இருப்பதற்கு திமுக அரசுதான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story