தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2023 6:45 PM GMT (Updated: 18 Feb 2023 6:45 PM GMT)

தூத்துக்குடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

வடமாநில தொழிலாளர்களை தமிழகத்தில் இருந்து வெளியேற்றக்கோரி தூத்துக்குடியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வி.வி.டி. சிக்னல் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வடக்கு மாவட்ட செயலர் கிதர் பிஸ்மி தலைமை தாங்கினார். மாநில இணைஞரணி துணைச்செயலர் டி.எஸ்.மணி, மாவட்ட பொருளாளர் முகம்மது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ரிச்சர்டு தேவ சகாயம் வரவேற்றார். மாநில இளைஞரணி செயலர் செரோன் குமார், வீராங்கனை இயக்க தலைவர் பாத்திமா பாபு, மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் ராஜலட்சுமி, இஸ்லாமிய கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் சகாயராஜ், சண்முகசுந்தரம், முகமது இப்ராஹிம், மணி, சாதிக், தமிழக மக்கள் கட்சி மாநில தலைவர் காந்தி மள்ளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story