அதிக அளவில் பயிர் கடன் வழங்கிய கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கு பாராட்டு


அதிக அளவில் பயிர் கடன் வழங்கிய கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கு பாராட்டு
x

அதிக அளவில் பயிர் கடன் வழங்கிய கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரூர்

கரூர் மண்டலத்தில் கரூர் மற்றும் குளித்தலை ஆகிய சரகங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு வட்டார வாரியாக அதிக அளவில் பயிர் கடன்கள், நகைக்கடன்கள், விவசாய நகைக்கடன்கள், மகளிர் சுய உதவி க்கடன்கள் வழங்கியதற்கும், வழங்கிய கடன்கள் முழுவதும் வசூல் செய்த சங்கங்களின் செயலாளர்கள் மற்றும் பொதுவினியோக திட்ட கூட்டுறவு ரேஷன் கடையில் சிறப்பாக பணிபுரிந்த 3 விற்பனையாளர்கள் ஆகியோருக்கு கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா பாராட்டி கேடயங்கள் வழங்கினார்.மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களும் 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 5 கோடிக்கு மேல் நடைமுறை மூலதனத்துடன் செயலாளர்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என கூறினார். இதில், கரூர் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ஆறுமுகம், கூட்டுறவு சார் பதிவாளர்கள், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொதுமேலாளர், சரக மேற்பார்வையாளர்கள், கரூர் மண்டல தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story