தூத்துக்குடியில் டாஸ்மாக் பார் டெண்டர் தேதி நீட்டிப்பு
தூத்துக்குடியில் டாஸ்மாக் பார் டெண்டர் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக, டாஸ்மாக் மேலாளர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடத்தில் (பார்) தின்பண்டம் விற்பனை மற்றும் காலி பாட்டில்கள் சேகரிப்பதற்கு ஆன்லைன் மூலம் டெண்டர் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 27.10.23 மதியம் 2 மணி வரை டெண்டர் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது டெண்டர் சமர்ப்பிக்க வேண்டிய கடைசிநாள் 1.11.23 அன்று மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முருகன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story