சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடல்


சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடல்
x

சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், எப்.எல். 3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் சுதந்திர தினமான வருகிற 15-ந்தேதி விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. சுதந்திர தினத்தன்று மேற்படி டாஸ்மாக் கடைகளும் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்களும், தனியார் மதுபான கூடங்களும் செயல்படாது என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story