காந்தி ஜெயந்தி, மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்
காந்தி ஜெயந்தி, மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுகின்றன
திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் வருகிற 2-ந்தேதி காந்தி ஜெயந்தி மற்றும் 9-ந்தேதி மிலாடி நபியை முன்னிட்டு அன்றைய தினங்கள் டாஸ்மாக் கடைகள் அடைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் நடத்தப்படும் மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபான கூடங்கள், எப்.எல்.2 கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த (எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ, எப்.எல்.11) உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் அனைத்தும் அன்றைய தினங்களில் மூடப்பட்டு இருக்க வேண்டும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story