உடுமலை நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்தவேண்டிய வரி, கடைவாடகைரூ.16 1/4கோடி நிலுவைஉள்ள நிலையில், நகராட்சி அதிகாரிகள் தீவிர வரிவசூலில் ஈடுபட்டுள்ளனர்.


உடுமலை நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்தவேண்டிய வரி, கடைவாடகைரூ.16 1/4கோடி நிலுவைஉள்ள நிலையில், நகராட்சி அதிகாரிகள் தீவிர வரிவசூலில் ஈடுபட்டுள்ளனர்.
x

உடுமலை நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்தவேண்டிய வரி, கடைவாடகைரூ.16 1/4கோடி நிலுவைஉள்ள நிலையில், நகராட்சி அதிகாரிகள் தீவிர வரிவசூலில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர்

உடுமலை

உடுமலை நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்தவேண்டிய வரி, கடைவாடகைரூ.16 1/4கோடி நிலுவைஉள்ள நிலையில், நகராட்சி அதிகாரிகள் தீவிர வரிவசூலில் ஈடுபட்டுள்ளனர்.

உடுமலை நகராட்சி

உடுமலை நகராட்சிக்கு சொத்துவரியை செலுத்தவேண்டியவர்கள் முதல் அரையாண்டிற்கான வரியைஏப்ரல் மாதத்திற்குள்ளும், 2-வது அரையாண்டிற்கான வரியை அக்டோபர் மாதத்திற்குள்ளும் செலுத்தியிருக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆனால் பலர் நகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரியினங்கள், குடிநீர் கட்டணம், கடைகளுக்கான வாடகை ஆகியவற்றை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.

உடுமலை நகராட்சிக்கு பொதுமக்களிடமிருந்து 2022-2023-ம் நிதி ஆண்டுக்கு முன்னதாக வசூலாக வேண்டியநிலுவைத்தொகைரூ.6கோடியே86லட்சம் இருந்தது.அந்த தொகையுடன் 2022-2023-ம் நிதி ஆண்டிற்கான வரியினங்கள், குடிநீர் கட்டணம், கடைவாடகை ஆகியவற்றை சேர்த்து மொத்தம்ரூ.22கோடியே 12லட்சத்து53ஆயிரம் வசூல் செய்யப்படவேண்டும் என்று குறியீடு (டிமாண்ட்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வரியினங்கள்

உடுமலை நகராட்சியில் வீடு, வணிக நிறுவனங்கள் உள்ளிட்டு மொத்தம் 17ஆயிரத்து460 வரிவிதிப்புகள் உள்ளன.இவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.8கோடியே34லட்சத்து55ஆயிரம் வசூல் செய்யப்பட வேண்டியதில் இதுவரை ரூ.2கோடியே23லட்சத்து59ஆயிரம்வசூலாகியுள்ளது.மீதிரூ.6கோடியே10லட்சத்து96ஆயிரம் நிலுவை உள்ளது. காலி இடங்களுக்கான வரிவிதிப்புகள்1,263உள்ளன.இவற்றின் உரிமையாளர்களிடமிருந்து

ரூ.88லட்சத்து86ஆயிரம் வசூல் செய்யப்படவேண்டியதில் இதுவரைரூ.15லட்சத்து2ஆயிரம்வசூலாகியுள்ளது.மீதி

ரூ73லட்சத்து84ஆயிரம் நிலுவை உள்ளது. தொழில் வரிவிதிப்புகள்1,499உள்ளது.

இந்ததொழில்வரிரூ.1கோடியே2லட்சத்து

20ஆயிரம் வசூல் செய்யப்பட வேண்டியதில் இதுவரைரூ.37லட்சத்து30ஆயிரம் வசூலாகியுள்ளது.மீதிரூ.64லட்சத்து90ஆயிரம் நிலுவைஉள்ளது.11ஆயிரத்து

73குடிநீர் இணைப்புகளுக்கான கட்டணம்ரூ.2கோடியே90லட்சத்து51ஆயிரம் வசூல் செய்யப்பட வேண்டியதில் இதுவரைரூ.62லட்சத்து20ஆயிரம் வசூலாகியுள்ளது.மீதிரூ.2கோடியே28லட்சத்து

31ஆயிரம் நிலுவை உள்ளது. நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் 216கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.இந்த கடைகளில் இருந்து ரூ.4கோடியே66லட்சத்து16ஆயிரம் வசூல் செய்யப்பட வேண்டியதில்இதுவரை

ரூ.1கோடியே72லட்சத்து83ஆயிரம்வசூலாகியுள்ளது.மீதிரூ.2கோடியே93லட்சத்து

33ஆயிரம் நிலுவை உள்ளது.குப்பை வரிவிதிப்புகள்16ஆயிரத்து488உள்ளன.இதற்கான வரித்தொகைரூ.53லட்சத்து

62ஆயிரம் வசூல் செய்யப்பட வேண்டியதில் இதுவரைரூ.14லட்சத்து36ஆயிரம் வசூலாகியுள்ளது.மீதி ரூ.39லட்சத்து26ஆயிரம் நிலுவைஉள்ளது.11ஆயிரத்து

422பாதாளசாக்கடை இணைப்புகளுக்கான கட்டணம்ரூ.3கோடியே76லட்சத்து63ஆயிரம் வசூலாக வேண்டியதில் இதுவரைரூ.55லட்சத்து93ஆயிரம் வசூலாகியுள்ளது.மீதிரூ.3கோடியே20லட்சத்து70ஆயிரம் நிலுவை உள்ளது.

2022-2023-ம் ஆண்டிற்கு வசூல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட மொத்த டிமாண்ட் தொகைரூ.22கோடியே12லட்சத்து53ஆயிரத்தில் இதுவரைபழைய நிலுவைத்தொகைரூ.1கோடியே35லட்சத்து77ஆயிரமும், நடப்பு ஆண்டிற்கான தொகைரூ.4கோடியே45லட்சத்து46ஆயிரமும் என மொத்தம்5கோடியே81லட்சத்து23 ஆயிரம் வசூலாகியுள்ளது. மீதி பழைய நிலுவைத்தொகைரூ.4கோடியே65லட்சத்து

9ஆயிரமும், நடப்பு ஆண்டிற்கான தொகைரூ.11கோடியே66லட்சத்து21ஆயிரமும்

எனமொத்தம்ரூ.16கோடியே31லட்சத்து30ஆயிரம் வசூலாக வேண்டியது நிலுவை உள்ளது.

தீவிர வரிவசூல்

இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன் உத்தரவின்பேரில் நகராட்சி வருவாய் ஆய்வாளர்கே.கலீல் ரஹ்மான் மற்றும் வருவாய் உதவியாளர்கள்

4 குழுக்களாக பிரிந்து வரி வசூலிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள், தாங்கள் நகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரித்தொகைகள், குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், நகராட்சி கடைகளுக்கான வாடகை ஆகியவற்றை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி வசூல் மையத்தில் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுவதாகவும், நிலுவைத்தொகை சம்பந்தமாக நகராட்சியிலிருந்து நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நாளில் இருந்து7நாட்களுக்குள் நிலுவைத்தொகையை செலுத்தாவிட்டால் குடிநீர் குழாய்இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.

----

Reporter : A. Stephen Location : Tirupur - Udumalaipet - Udumalai


Next Story